உண்மைக்கு புறம்பாகவும், வன்முறையை தூண்டும் விதமாகவும் கருத்துக்களை பதிவிட்ட 900 கணக்குகளை ஃபேஸ்புக் நிறுவனம் நீக்கியுள்ளது.
தற்போது உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் குறித்து பல்வேறு விதமான கருத்துக்கள் வலம் வரும் நிலையில், கொரோனா குறித்த தவறான தகவல்கள் அதிகம் பரப்பப்படுதாகவும், இனவெறி குறித்து வன்முறையை தூண்டிவிடும் கருத்துக்களை பதிவிடுவதாகவும் புகார் எழுந்தது. இது குறித்து ஆய்வு நடத்தி ஃபேஸ்புக் நிறுவனம், உள்நோக்கத்துடன் தவறான தகவல்களை பரப்பிய 900 கணக்குகளை நீக்கியுள்ளது. அதேபோல், கடந்த 2 வாரங்களுக்கு முன் இனவெறி போராட்டத்தில் வன்முறையை தூண்டும் விதமாக கருத்து தெரிவித்த 500 ஃபேஸ்புக் கணக்குகளும் 300 இன்ஸ்டாகிராம் கணக்குகளும் நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post