இந்தியாவில் மேலும், 11 ஆயிரத்து 458 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ள நிலையில், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 3 லட்சத்து 8 ஆயிரத்து 993 ஆக அதிகரித்தது.
கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா உள்ளது. அங்கு, கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்து ஆயிரத்து 141 ஆக உயர்ந்துள்ளது. இதற்கு அடுத்தபடியாக, தமிழகத்தில் 40 ஆயிரத்து 698 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 22 ஆயிரத்து 47 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். டெல்லியில் 36 ஆயிரத்து 824 பேருக்கும், குஜராத்தில் 22 ஆயிரத்து 527 பேருக்கும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. உத்தரப் பிரதேசத்தில் 12 ஆயிரத்து 616 பேரும், ராஜஸ்தானில் 12 ஆயிரத்து 68 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மத்தியப் பிரதேசத்தில் 10 ஆயிரத்து 443 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், கர்நாடகா, ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களிலும் பாதிப்பு அதிகரித்துள்ளது.
Discussion about this post