தமிழக சுகாதாரத்துறை செயலாளராக மீண்டும் ராதாகிருஷ்ணனை நியமித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தடுப்பு பணிகளை தீவிரமாக மேற்கொண்டு வரும் தமிழக அரசு, நோயின் தாக்கத்தை கட்டுக்குள் கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில், வருவாய் நிர்வாக ஆணையராக இருக்கும் ராதாகிருஷ்ணனை, சுகாதாரத்துறை செயலாளராக தமிழக அரசு நியமனம் செய்துள்ளது. ஏற்கனவே தமிழக சுகாதாரத்துறை செயலாளராக பணியாற்றிய இவர், பின்னர் வருவாய் நிர்வாக ஆணையராக மாற்றம் செய்யப்பட்டார்.
தற்போது சுகாதாரத்துறை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள ராதாகிருஷ்ணன், வருவாய் நிர்வாக ஆணையர் பொறுப்பையும் கூடுதலாக கவனிப்பார். அதே போன்று, கொரோனா தடுப்பு சிறப்பு அதிகாரியாகவும் தொடர்ந்து செயல்படுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. சுகாதாரத் துறை செயலாளராக இருந்த பீலா ராஜேஷ், வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை செயலாளராக மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
Discussion about this post