சீனாவில் இருந்து பொருட்களை இறக்குமதி செய்யப்போவதில்லையென முடிவு செய்துள்ள இந்திய வணிகர்கள், சுமார் ஒரு லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான இறக்குமதியை நிறுத்த திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளனர்.
சிஏஐடி எனப்படும் அகில இந்திய வணிகர்கள் கூட்டமைப்பு வரும் 2021 ஆம் டிசம்பர் மாதம் முதல் இதனை நடைமுறைப்படுத்த உள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த அமைப்பில் 40 ஆயிரம் வணிகர்களும், 7 கோடிக்கும் அதிகமான சில்லறை வணிகர்களும் இடம்பெற்றுள்ளனர். சீன பொருட்களை புறக்கணிக்கும் இயக்கத்தை இந்த அமைப்பு ஆதரிப்பதாக அறிவித்துள்ளது. முதற்கட்டமாக சீனாவில் இருந்து பெறப்படும் 3 ஆயிரம் பொருட்களுக்கு மாற்றாக இந்தியாவில் உற்பத்தி செய்யக்கூடிய ஆற்றலை பெருக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. சீன பொருட்களை வாடிக்கையாளர்கள் அதிகம் விரும்புவதில்லையென்றும், அவர்களிடமும் மாற்றம் வந்துள்ளதாகவும் அந்த அமைப்பினர் தெரிவித்துள்ளனர். எல்லை பகுதியில் சீனாவின் அத்துமீறலை கண்டிக்கும் விதமாக சீன பொருட்களை புறக்கணிக்கும் முடிவுக்கு இந்திய மக்கள் வந்துள்ளதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.
Discussion about this post