உலக நாடுகளில் கொரோனா வைரசின் தாக்கம் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. தொடக்கத்தில் கிழக்கு ஆசியா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நோய் தொற்று வேகமாக பரவி நிலையில், தற்போது அமெரிக்காவில் அதிகரித்துள்ளது. ஐரோப்பிய நாடுகளில் நிலைமை முன்னேற்றத்தை கண்டிருந்தாலும், உலகளவில் படுமோசமான நிலையை சந்தித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனத்தின் தலைவர் டெட்ராஸ் அதனோம் தெரிவித்துள்ளார். பிரிவினை வாதத்தை உலக சுகாதார நிறுவனம் எதிர்ப்பதாகவும், நிறவெறிக்கு எதிராக பொதுமக்கள் பாதுகாப்பான முறையில் போராட வேண்டும் எனவும் அதனோம் வலியுறுத்தினார்.
Discussion about this post