ஈரோடு மாவட்டம் கொடுமணல் அகழாய்வுப் பணியை தமிழகத் தொல்லியல் துறையினர், கடந்த 10 நாட்களாக மேற்கொண்டு வருகின்றனர். இந்த அகழாய்வுப் பணியில் இரும்பு, பளிங்கு கற்கள், கல்மணி சங்குகள், வளையல் கண்ணாடிகள் போன்ற அரிய வகைப் பொருட்கள் கிடைத்து வருகின்றன. அதேபோல் மனித எலும்புகள், சரளை மண் ஓடுகள், மக்கள் வாழ்ந்த வீடுகளுக்கான தரைத்தளம், சுடுமண்ணால் ஆன நெசவுத் தொழில் பயன்பாட்டுப் பொருட்கள், முதுமக்கள் தாழி உள்ளிட்டவை தொல்லியல் துறையினர் சேகரித்துள்ளனர். தொடர்ந்து நடைபெற்று வரும் அகழாய்வுப் பணியில் மேலும் பல பழங்கால பொருட்கள் கிடைக்க வாய்ப்பிருப்பதாகவும், அகழாய்வுப் பணியில் ஈடுபட்டுள்ள தொல்லியல் துறையினர் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post