ஊரடங்கு காரணமாக விலை திருத்தங்களை எண்ணெய் நிறுவனங்கள் நிறுத்தியிருந்த நிலையில் தற்போது மீண்டும் தொடங்கியுள்ளது. இதையடுத்து நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 60 காசுகள் உயர்ந்து 71 ரூபாய் 81 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 60 காசுகள் அதிகரித்து 69 ரூபாய் 99 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் பெட்ரோல் லிட்டருக்கு 53 காசுகள் உயர்ந்து 76 ரூபாய் 7 காசுகளுக்கும், டீசல் லிட்டருக்கு 52 காசுகள் உயர்ந்து 68 ரூபாய் 78 காசுகளுக்கும் விற்பனையாகிறது.
Discussion about this post