அமெரிக்கா 20 லட்சம் கொரோனா தடுப்பூசி மருந்துகளை தயாரித்து முடித்துள்ளதாகவும் அவைகள் பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார்.நேற்று வெள்ளை மாளிகையில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய அமெரிக்க அதிபர் டிரம்ப், கொரோனா தடுப்பூசி குறித்த ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்றதாகவும், தடுப்பூசிகள் உற்பத்தியில் மிகச்சிறப்பான முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். தற்போதைக்கு 20 லட்சத்துக்கும் அதிகமான கொரோனா தடுப்பூசி மருந்துகள் கைவசம் உள்ளதாக தெரிவித்த அவர், தரச்சான்றிதழ் கிடைத்த பிறகு, உடனடியாக பயன்படுத்தும் நிலையில் அவைகள் தயார் நிலையில் உள்ளன என்றும் தெரிவித்தார். அதே சமயம் எந்தெந்த நிறுவனங்கள் தடுப்பூசி தயாரிப்பில் ஈடுபட்டுள்ளன என்பதை டிரம்ப் தெரிவிக்க வில்லை. நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான செய்தியின் படி, ஐந்து முக்கிய நிறுவனங்களை தேர்வு செய்து அவற்றிடம் தடுப்பூசி உற்பத்தி பணிகள் வழங்கப்பட்டுள்ளன.
Discussion about this post