தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கான கட்டணங்களை சுகாதாரத்துறை நிர்ணயித்துள்ளது.தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்காக அனுமதிக்கப்படுபவர்களிடம் அதிகளவில் கட்டணம் வசூலிக்கப்படுவதாக வந்த புகாரை அடுத்து, சுகாதாரத்துறை செயலாளர் தலைமையில் குழு அமைக்கப்பட்டு கட்டணம் மற்றும் நிபந்தனைகள் வகுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், தனியார் மருத்துவமனைகளில் அளிக்கப்படும் சிகிச்சை, A1, A2, A3, A4 என நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் படி, அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறியுடன் கூடிய நபர்கள் A1, A2, என்ற பிரிவுகளில் பொது வார்டில் சிகிச்சை பெற நாளொன்றுக்கு அதிகபட்சமாக 7 ஆயிரத்து 500 ரூபாய் வசூலிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல், A3, A4 என்ற பொது வார்டில் சிகிச்சை பெற நாளொன்றுக்கு அதிகபட்சமாக 5 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐசியு எனப்படும் தீவிர சிகிச்சை பிரிவில் நாளொன்றுக்கு அதிகபட்சமாக15 ஆயிரம் ரூபாய் வரை வசூலிக்கலாம் என சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post