லடாக் எல்லை பிரச்னை தொடர்பாக இந்திய – சீன ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.இந்தியா மற்றும் சீனா இடையே லடாக் பகுதியில் எல்லை பிரச்னை ஏற்பட்டுள்ள நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன் கிழக்கு லடாக் பகுதியில் இருதரப்பு படைகளும் குவிக்கப்பட்டன. இதனால் பதற்றம் ஏற்பட்ட நிலையில், பிரச்னைக்கு தீர்வு காணும் விதமாக இருதரப்பு தூதரக அதிகாரிகள் மற்றும் ராணுவ அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்நிலையில், இருநாடுகளின் ராணுவ உயரதிகாரிகள் இன்று பேச்சு வார்த்தை நடத்துகின்றனர். இந்தியா தரப்பில் லெப்டினண்ட் ஜெனரல் ஹரிந்தர் சிங், சீனாவின் மேஜர் ஜெனரல் லியு லின்னுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார். எல்லைக்கட்டுப்பாட்டு பகுதியை அடுத்துள்ள சீனாவின் மோல்டோ பகுதியில் இந்த பேச்சுவார்த்தை நடைபெற உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Discussion about this post