புதுச்சேரியில் வரும் 8ஆம் தேதி முதல், வழிபாட்டுத் தலங்கள் திறக்கப்படும் என முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரியில் 5ஆம் கட்ட ஊரடங்கில் தளர்வு அளிப்பது குறித்து முதலமைச்சர் நாராயணசாமி தலைமையில் அமைச்சரவை கூட்டம், சட்டமன்ற வளாகத்தில் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை சந்தித்த முதலமைச்சர், புதுச்சேரியில் ஜிப்மர் மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் மற்றும் சட்டமன்ற வளாகத்தில் உள்ள முதல்வர் அலுவலகத்தில் பணிபுரியும் ஊழியர் உட்பட, 9 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாகக் கூறினார். தற்போது, புதுச்சேரியில் 45 பேர் நோய்த்தொற்றுடன் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும், வரும் 8ஆம் தேதி முதல், புதுச்சேரியில் உள்ள அனைத்து வழிபாட்டுத் தலங்கள், வணிக வளாகங்கள் திறக்கப்பட்டு, கோயிலுக்கு வரும் பக்தர்கள், சமூக இடைவெளியுடன் முகக் கவசம் அணிந்து வழிபட அனுமதிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டார்.
Discussion about this post