நாடு முழுவதும் 200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயங்க தொடங்குகின்ற நிலையில், தமிழகத்தில் நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன. நாடு முழுவதும் இன்று முதல் இயக்கப்பட உள்ள 200 சிறப்பு ரயில்களில், ஒரு லட்சத்து 45 ஆயிரம் பேர் பயணம் செய்ய உள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. மே 12-ஆம் தேதி முதல் ஷ்ராமிக் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கூடுதலாக 200 சிறப்பு ரயில்கள் இன்று முதல் இயக்கப்பட உள்ளன. ஜூன் 1 முதல் ஜூன் 30ம் தேதி வரை இந்த சிறப்பு ரயில்களில் பயணம் செய்ய 26 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளதாக ரயில்வே அறிவித்துள்ளது. ரயில் புறப்படுவதற்கு 90 நிமிடங்களுக்கு முன்பே பயணிகள் ரயில் நிலையத்துக்கு வர வேண்டும் எனவும், முன்பதிவு மற்றும் ஆர்ஏசி டிக்கெட் உள்ளவர்கள் மட்டுமே பயணம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கோவை-மயிலாடுதுறை- கோவை, மதுரை-விழுப்புரம்-மதுரை, திருச்சி- நாகர்கோயில்-திருச்சி, கோவை-காட்பாடி-கோவை உள்ளிட்ட நான்கு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.
Discussion about this post