ஊரடங்கை நீட்டிப்பதா அல்லது தளர்த்துவதா என்பது தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி வரும் 29ம் தேதி மாவட்ட ஆட்சியர்களுடன் ஆலோசனை மேற்கொள்கிறார். சென்னை தலைமைச் செயலகத்தில், வரும் 29ம் தேதி காணொலி மூலம் நடைபெறும் ஆலோசனைக் கூட்டத்தில், அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் பங்கேற்கவுள்ளனர். அப்போது, மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்ட கொரோனா தடுப்பு பணிகள் மற்றும் பாதிப்பின் நிலை குறித்து மாவட்ட ஆட்சியர்களிடம் கேட்டறிகிறார். வரும் 31ஆம் தேதியுடன் ஊரடங்கு நிறைவடையும் நிலையில், ஊரடங்கை மேலும் நீட்டிப்பது குறித்தும், தளர்வுகள் வழங்குவது குறித்தும், முக்கிய முடிவுகள் எடுக்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன
Discussion about this post