ஜூன் மாதமும் விலையில்லா ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான டோக்கன், வரும் 29ம் தேதி முதல் விநியோகம் செய்யப்படும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.இது தொடர்பாக முதலமைச்சர் வெளியிட்டுள்ள அறிக்கையில், குடும்ப அட்டைத்தாரர்களுக்கு ஜூன் மாதத்திற்கான அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும், நியாய விலைக் கடைகளில் விலையின்றி வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விலையில்லா பொருட்கள் பெறுவதற்கான டோக்கன் வரும் 29ம் தேதி முதல் 31ம் தேதி வரை வழங்கப்படும் என்றும், வீடுகளுக்கே சென்று டோக்கன்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக முதலமைச்சர் தெரிவித்துள்ளார். டோக்கன்களில் குறிப்பிடப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தில் விலையில்லா பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் எனவும் முதலமைச்சர் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். முகக் கவசம் அணிந்தும், சமூக இடைவெளி கடைப்பிடித்தும் பொதுமக்கள் விலையில்லா பொருட்களை பெற்றுக் கொள்ள வேண்டும் என முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தியுள்ளார்.
Discussion about this post