வெப்பச்சலனம் மற்றும் மேலடுக்கு சுழற்சி காரணமாக அடுத்த 48 மணி நேரத்திற்குள் உள் தமிழகத்தின் ஒரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் தெரிவித்துள்ளார். கோவை, தருமபுரி, சேலம், கிருஷ்ணகிரி உள்ளிட்ட 9 மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும் அவர் தெரிவித்தார். மதுரை, திருச்சி, கரூர், உள்ளிட்ட 7 மாவட்டங்களில் வெப்பம் அதிகரிக்கும் என்பதால், பகல் நேரங்களில் மக்கள் வெளியே செல்வதை தவிர்க்க வேண்டும் எனவும் புவியரசன் அறிவுறுத்தி உள்ளார். மன்னார் வளைகுடா பகுதிகளில் பலத்த காற்று வீசுவதால் அடுத்த 2 நாட்களுக்கு மீனவர்கள் அப்பகுதிக்கு செல்ல வேண்டாம் எனவும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் எச்சரித்துள்ளார்.
Discussion about this post