ஆங்கிலேயர்களால் 1875ஆம் ஆண்டு மே 26ஆம் தேதி திண்டுக்கல் மாவட்டத்தில் கொடைக்கானல் மலை கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த நாளே கொடைக்கானல் மலையின் பிறந்தநாளாக கருதப்படுகிறது. இந்த நிலையில், கடந்த 2017ஆம் ஆண்டு முதல் கொடைக்கானல் மலை கண்டுபிடிக்கப்பட்ட நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என அறிவிக்கப்பட்டது. தற்போது ஊரடங்கால் கோடை விழா ரத்து செய்யப்பட்டதுடன், கொடைக்கானல் பிறந்தநாள் விழாவும் ரத்து செய்யப்பட்டுள்ளதால் வருத்தமடைந்த மக்கள் அடுத்தாண்டு கொடைக்கானல் பிறந்தநாள் விழாவை விமர்சையாக கொண்டாடுவோம் என தெரிவித்துள்ளனர்.
Discussion about this post