கொரோனா பரவல் காரணமாக, டெல்லி-காசியாபாத் எல்லை மூடப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. நாடு முழுவதும் மே 31 வரை 4ம் கட்ட ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள நிலையில், தனி நபர் வாகனங்கள் செல்ல தளர்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், டெல்லி மற்றும் உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் இடையே போக்குவரத்து அதிகரித்ததால், கடும் வாகன நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகனங்கள் பல மணி நேரம் காத்திருக்கவேண்டிய சூழல் நிலவியது. இதனால், இரண்டு நகரங்களுக்கு இடையேயான எல்லையை காசியபாத் நிர்வாகம் மூடியது. காசியாபாத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதாலும், கடந்த 24 மணி நேரத்தில் 10க்கும் மேற்பட்டோருக்கு பாதிப்பு உறுதிப்படுத்தப்பட்டதாலும், இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக, காசியபாத் மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது. டெல்லிக்கு அதிகளவிலான மக்கள் சென்று திரும்புவதால் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post