கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்த பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கால், சுமார் 78 ஆயிரம் உயிரிழப்புகள் தவிர்க்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக, நாடு முழுவதும் வரும் 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. முதல் இரண்டு கட்ட ஊரடங்கால், கொரோனா வைரஸ் பரவல் பெருமளவு குறைக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி.கே.பால் தெரிவித்துள்ளார். ஏப்ரல் 3ம் தேதியின் போது நாளொன்றுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு 22.6 சதவீதமாக இருந்ததாகவும், ஏப்ரல் 4ம் தேதி முதல் நோய் தொற்று பாதிப்பு படிப்படியாக குறைந்து தற்போது 5.5 சதவீதம் என்ற அடிப்படையில் உள்ளதாக தெரிவித்துள்ளார். ஊரடங்கால் 14 லட்சம் முதல் 29 லட்சம் பேர் வரை, கொரோனா தாக்கத்தில் இருந்து பாதுகாக்கப்பட்டுள்ளதாக நிதி ஆயோக் உறுப்பினர் வி.கே.பால் கூறியுள்ளார்.
Discussion about this post