தமிழக மக்களின் நலனுக்காக பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அறிவித்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபர் கபில் நன்றி தெரிவித்துள்ளார். திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் முதியவர்களுக்கான சிறப்பு மருத்துவ முகாமில் பங்கேற்ற அமைச்சர் நிலோபர் கபில் முதியவர்களுக்கு கபசுர குடிநீர் வழங்கினார். பின்னர் பேசிய அமைச்சர் நிலோபர் கபில், பல்வேறு நோய் தொற்றுகளை கடந்து வந்த போதிலும் மக்களுக்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அதிமுக அரசு எடுத்துள்ளதாகவும், தற்போது இந்த தொற்றில் இருந்து மக்களை காக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்த தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் கூறினார்.
Discussion about this post