வேதா இல்லத்தை அம்மாவின் நினைவிடமாக மாற்றிய முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சருக்கு தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாக, துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் காங்கேயம் நகராட்சிக்குட்பட்ட 18 வார்டு பகுதி மக்களுக்கு நிவாரணம் வழங்கும் நிகழ்ச்சியில், துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன் கலந்துகொண்டு, நிவாரண உதவிகளை வழங்கினார். இதன் மூலம், மொத்தம் 12 ஆயிரம் குடும்பங்கள் நிவாரண பொருட்களை பெற்று பயனடைந்தனர். இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த பொள்ளாச்சி ஜெயராமன், குடிமராமத்து பணிக்காக 500 கோடி ரூபாய் நிதியை ஒதுக்கி, தமிழக அரசு விவசாயத்திற்கு பெரும் உறுதுணையாக விளங்குவதாக தெரிவித்தார். மேலும் வேதா இல்லத்தை அம்மாவின் நினைவிடமாக மாற்றிய முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் தலைவணங்கி நன்றி தெரிவிப்பதாக கூறினார்.
Discussion about this post