சென்னையில் பிரபல நிறுவனங்களின் பெயரில் போலி கிருமி நாசினி தயாரித்த நிறுவனத்திற்கு சீல்வைத்த காவல்துறையினர் இருவரைக் கைது செய்துள்ளனர். சென்னை குற்றப்பிரிவு காவல்துறை கூடுதல் இயக்குநர் முகமது ஷகில் அக்தர் அலுவலகத்துக்கு வந்த தகவலின் அடிப்படையில் காவல் கண்காணிப்பாளர் ராமர் தலைமையில் அறிவுசார் சொத்துரிமை அமலாக்கப்பிரிவு அதிகாரிகள் சென்னை வி.எம்.தெருவிலுள்ள தனியார் நிறுவனத்தில் திடீர் சோதனை நடத்தினர். அங்கு போலியான பெயரில் தயாரிக்கப்பட்ட கிருமிநாசினிகளைக் கைப்பற்றியதுடன் வடபெரும்பாக்கத்தில் இயங்கிவந்த போலி வீட்டு உபயோகப் பொருள் தயாரிப்பு நிறுவனத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். அங்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பிலான போலி கிருமி நாசினிகளை பறிமுதல் செய்து குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த துளசி நாதுசிங், மற்றும் மத்திய பிரதேசத்தை சேர்ந்த ராஜேஷ் ரானா என்பவரையும் கைது செய்தனர்.
Discussion about this post