ஜெயலலிதாவின் வேதா நிலைய இல்லத்தை நினைவில்லமாக்க தமிழக அரசு அவசர சட்டம் பிறப்பித்துள்ளது. +++இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் இல்லமான வேதா நிலையம், நினைவு இல்லமாக்கப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, வேதா நிலையத்தை நினைவிடமாக்க தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், புரட்சித் தலைவி டாக்டர் ஜெயலலிதா நினைவு அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகவும், இதன் தலைவராக முதலமைச்சரும், உறுப்பினர்களாக துணை முதலமைச்சர், அமைச்சர் மற்றும் அதிகாரிகள் இருப்பார்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. வேதா நிலையத்தில் உள்ள பொருட்கள், அறக்கட்டளையின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்படுவதாகவும், வேதா நிலையத்தையும், அதில் உள்ள பொருட்களையும் பராமரிக்க அறக்கட்டளை நடவடிக்கை மேற்கொள்ளும் எனவும் தமிழக அரசின் செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Discussion about this post