வங்க தேசத்தில் கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையினை
கண்டறிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.கொரோனா வைரஸை அழிக்க மருந்து அல்லது தடுப்பூசி மட்டுமே ஒரே வழி என அறிவியலாளர்கள் தெரிவித்து வருகின்றனர். இந்த வருட இறுதியில் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கப்படும் என்றும் கூறப்படுகிறது. அனைத்து நாடுகளும் கொரோனாவுக்கு மருந்து கண்டுபிடிக்கும் முயற்சியில் மிகத் தீவிரமாக ஈடுபட்டுள்ளன.இந்நிலையில், வங்கதேச மருத்துவக்கல்லூரி மருத்துவமனையை சேர்ந்த தரெக் ஆலம் என்ற மருத்துவரின் குழு, கொரோனாவை கட்டுப்படுத்தும் மருந்து கலவையை கண்டறிந்துள்ளது. தரெக் ஆலம் தலைமையிலான குழு, கொரோனா குறித்து ஆய்வு செய்து வந்தனர். அதற்கான தடுப்பு மருந்தினை உருவாக்க தீவிர சோதனையில் ஈடுபட்டு Iver mectin மற்றும் Doxy cycline ஆகிய மருந்துகளை கலந்து அளித்து 60 பேரிடம் சோதித்துள்ளனர். இந்த சோதனையில் 60 பேரும் வெற்றிகரமாக கொரோனாவில் இருந்து மீண்டுள்ளனர். முதல் 3 நாட்களில் சுவாச பிரச்னை சீரடைந்தும், 4ம் நாளில் கொரோனா பரிசோதனையில் தொற்று இல்லை என்றும் முடிவுகள் கிடைத்துள்ளன. மேலும் பக்க விளைவுகள் எதுவும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த குழுவினர், சர்வதேச அங்கீகாரத்துக்காக விண்ணப்பித்துள்ளனர்.
Discussion about this post