ஜுன் ஒன்றாம் தேதி முதல், குளிர்சாதன வசதி இல்லாத 200 ரயில்கள் தினந்தோறும் இயக்கப்படும் என ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுப்பதற்காக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு, மக்கள் பயணிக்கும் பொது போக்குவரத்து சேவைகள் முடக்கப்பட்டன. புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், மாணவர்கள், சுற்றுலாப் பயணிகள் தங்கள் மாநிலத்திற்கு திரும்புவதற்காக, சிறப்பு ரயில்கள் மற்றும் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இந்நிலையில், ஜுன் ஒன்றாம் தேதி முதல், தினந்தோறும் 200 ரயில்கள் இயக்கப்படும் என மத்திய ரயில்வேத்துறை அமைச்சர் பியூஸ் கோயல் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள செய்தியில், வழக்கமான கால அட்டவணையின்படி ரயில்கள் இயக்கப்படும் என்றும், இதற்கான ஆன்லைன் முன்பதிவு விரைவில் தொடங்கும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Discussion about this post