கொரோனா வைரஸ் பாதிப்பால் பொருளாதாரம் நலிவடைந்துள்ள நிலையில் அதை மீட்பதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது. தொழிலாளர்களின் நலன் கருதி மே, ஜூன் மற்றும் ஜூலை மாதத்துக்கான வருங்கால வைப்பு நிதியை அரசே செலுத்தும் என மத்திய அரசு அண்மையில் தெரிவித்தது. நிறுவனங்கள் தரப்பில் இருந்தும், தொழிலாளர்கள் தரப்பிலும் செலுத்தப்படும் வருங்கால வைப்பு நிதி பங்களிப்பு தொகை 12 சதவீத்தில் இருந்து 10 சதவீதமாக குறைக்கப்படும் என்றும் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்தார். இதன் மூலம் பல்வேறு தனியார் நிறுவன தொழிலாளர்களின் மே, ஜூன் மற்றும் ஜூலை மாதத்துக்கான ஊதியம் உயரும் என தெரிகிறது. மேலும் இச்சலுகையால் நான்கு கோடியே 30 லட்சம் தொழிலாளர்கள் பயனடைவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post