சீனாவால் உலக சுகாதார அமைப்பிற்கு புதிதாக அறிவிக்கபட்ட நிதி, தோல்வியை திசை திருப்பும் செயல் என்று அமெரிக்கா குற்றம்சாட்டியுள்ளது.கொரோனா வைரஸ் சீனாவில் உள்ள ஆய்வகத்தில் உருவாக்கப்பட்டதாகவும், இதற்கு கைப்பாவையாக உலக சுகாதார அமைப்பு உள்ளதாகவும், அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றம்சாட்டி வந்தார். எந்தவொரு நாடும் வழங்காத நிதியை உலக சுகாதார நிறுவனத்திற்கு ஆண்டுதோறும் வழங்கும் அமெரிக்கா, அந்த நிதியை குறைக்க முடிவு செய்துள்ளதாகவும் கூறினார். இந்நிலையில், சீனாவால் உலக சுகாதார அமைப்பிற்கு புதிதாக அறிவிக்கபட்ட நிதி குறித்து, வெள்ளை மாளிகை சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. சீனா கொரோன வைரஸ் பரவலுக்கு பதில் அளிக்காமல், தோல்விகளை திசை திருப்பவே 2 பில்லியன் டாலர் நிதியுதவியை அறிவித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளது.
Discussion about this post