கொரோனா வைரஸ் பரவ யார் காரணம் என்று ஆய்வு செய்ய உலக சுகாதார அமைப்பில் ஆஸ்திரேலியா தீர்மானம் கொண்டு வந்ததற்கு, பழிவாங்கும் நடவடிக்கையாக, ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யும் கோதுமைக்கு, சீனா 80 சதவீத வரி விதித்துள்ளது. கொரோனா தொற்று பரவலுக்கு காரணம் யார்? என்று விசாரணை நடத்தும்படி, ஆஸ்திரேலியா சார்பில் உலக சுகாதார அமைப்பில் தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இதற்கு இந்தியா உள்ளிட்ட 62 நாடுகள் ஆதரவு தெரிவித்துள்ளன. இதனால் சீனாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்படும் என கூறப்படுகிறது. கொரோனா பாதிப்புகள் அடங்கிய பிறகு, பரவலுக்கான காரணம் குறித்த ஆய்வுக்கு ஒத்துழைக்க தயார் என சீன அதிபர் ஜீ ஜின்பிங் தெரிவித்துள்ளார். இந்நிலையில், இன்று முதல் ஆஸ்திரேலியாவில் இருந்து இறக்குமதி செய்யும் கோதுமைக்கு 80 சதவீத வரி விதித்து சீனா உத்தரவிட்டுள்ளது. ஆய்வுக்கு சீன அதிபர் சம்மதம் தெரிவித்த ஒரு மணி நேரத்தில் இந்த அறிவிப்பு வெளியானது. சீனாவின் இந்த முடிவுக்கு ஆஸ்திரேலியா ஆட்சேபனை தெரிவித்துள்ளது. ஆஸ்திரேலிய கோதுமைகளுக்கு மானியம் கொடுப்பதால், உள்நாட்டு கோதுமை உற்பத்தி பாதிக்கப்படுவதை தடுக்கவே இந்த வரிவிதிப்பு என சீனா விளக்கம் அளித்துள்ள போதும், ஆஸ்திரேலியா அதனை ஏற்க மறுத்துள்ளது. இதை அடுத்து, ஆஸ்திரேலியா உற்பத்தி செய்யும் கோதுமையை, சவுதி அரேபியாவுக்கு ஏற்றுமதி செய்யக்கூடும் எனக்கூறப்படுகிறது.
Discussion about this post