மதுபானக் கடைகள் திறப்பு விவகாரத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் இரட்டை வேடம் போடுவதாக புதுச்சேரி அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன் குற்றம்சாட்டியுள்ளார்
புதுச்சேரியில், நாளை முதல் மதுபான கடைகள் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்த அதிமுக சட்டமன்ற கொறடா வையாபுரி மணிகண்டன், தமிழகத்தில் மதுக்கடைகள் திறந்தபோது திமுக கண்டனம் தெரிவித்ததை நினைவு கூர்ந்தார். ஆனால் தற்போது திமுகவின் கூட்டணிக் கட்சியான காங்கிரஸ், புதுச்சேரி மாநிலத்தில் மதுக்கடைகளை திறந்துள்ளதையும் சுட்டிக்காட்டினார். தமிழகத்தில் மதுக்கடைகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வரும் திமுக, புதுச்சேரி அரசுக்கு அளித்து வரும் ஆதரவை வாபஸ் பெறுமா என்றும் வையாபுரி மணிகண்டன் கேள்வி எழுப்பினார்.
Discussion about this post