தமிழகத்தில் அரசு அலுவலகங்கள் இன்று முதல் 50 சதவீத ஊழியர்களுடன் வாரத்தின் ஆறு நாட்கள் செயல்பட உள்ளன. தமிழகத்தில் நான்காம் கட்ட ஊரடங்கு இன்று முதல் துவங்கிய நிலையில், இன்று முதல் அரசு அலுவலகங்கள் செயல்பட துவங்கின. அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. அதன்படி, சமூக இடைவெளியை கடைபிடித்து 50 சதவீத பணியாளர்களுடன் வாரத்தில் 6 நாட்கள் அலுவலகங்ள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஊழியர்கள் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு, இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்ற வேண்டும் எனவும், ஊழியர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் செய்து தரப்பட வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.அரசு வெளியிட்ட இந்த அறிவிப்புகளை பின்பற்றி, அரசு அலுவலகங்கள் இன்று முதல் செயல்பட துவங்கியுள்ளன.
Discussion about this post