இந்தியாவின் மிகப் பெரிய முன்னணி நிறுவனமான ஜியோவின், 6 ஆயிரத்து 598 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை, ஜென்ரல் அட்லாண்டிக் நிறுவனம் வாங்கியுள்ளது. ஜியோ நிறுவனத்தில் கடந்த சில வாரங்களாக, உலகின் முன்னணி நிறுவனங்கள் மிகப்பெரும் அளவில் முதலீடு செய்துவருகின்றன. ஃபேஸ்புக், சில்வர் லேக் நிறுவனம், விஸ்டா ஈக்விட்டி பார்ட்னர்ஸ் ஆகிய நிறுவனங்கள், கடந்த ஒரு மாத காலத்துக்குள் பெரிய அளவில் முதலீடு செய்துள்ளன. இந்நிலையில், ஜென்ரல் அட்லாண்டிக் நிறுவனம், தமது நிறுவனத்தில் 6 ஆயிரத்து 598 கோடி ரூபாய் முதலீடு செய்துள்ளதாக, ஜியோ தெரிவித்துள்ளது. இதன் மூலம் ஜியோவின் 1.34 சதவீத பங்குகளை ஜென்ரல் அட்லாண்டிக் வாங்கியுள்ளது. கடந்த ஒரு மாதத்தில் மட்டும், தமது நிறுவன பங்குகளை விற்றதன் மூலம், 67 ஆயிரத்து 194 கோடி ரூபாய் வருமானத்தை ஜியோ ஈட்டியுள்ளது.
Discussion about this post