தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் மே 31ம் தேதி வரை ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். இதில், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 12 மாவட்டங்களில் எந்த தளர்வுகளும் இல்லை என்றும், ஏற்கெனவே பின்பற்று வந்த நடைமுறைகள் தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி, கோவை உள்ளிட்ட 25 மாவட்டங்களுக்கு பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ஊரடங்கு உத்தரவு மே 31ம் தேதி, நள்ளிரவு 12 மணி வரை அமலில் இருக்கும் என்றும், நோய் தொற்று குறைந்த பின் படிப்படியாக தளர்வுகள் அளிக்கப்படும் என்றும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
Discussion about this post