கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக நாடு முழுவதும் மார்ச் 25ம் தேதி ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. இதையடுத்து இரண்டு முறை ஊரடங்கு நீட்டிக்கப்பட்ட நிலையில் 3ம் கட்ட ஊரடங்கு நாளையுடன் முடிவடைகிறது. அண்மையில் நாட்டு மக்களுக்காக உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி, 4ம் கட்ட பொது முடக்கம் உண்டு எனவும், ஆனால் அது வேறு மாதிரியாக இருக்கும் எனவும் தெரிவித்தார். இந்நிலையில் அடுத்த கட்ட ஊரடங்கு குறித்த விதிமுறைகளை மத்திய உள்துறை அமைச்சகம் இன்று அறிவிக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் இயக்கப்படாது என அறிவிக்கப்பட்டிருந்தாலும், தற்போது இயக்கப்படுவது போல் சிறப்பு ரயில்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நோய் பாதிப்பை பொறுத்து, பல்வேறு கட்டுப்பாடுகளுக்கு தளர்வு அளிக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
Discussion about this post