தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சனிக்கிழமை உள்பட வாரத்தின் 6 பணி நாட்களிலும் அரசு அலுவலகங்கள் இயங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் 2 குழுக்களாக பிரிக்கப்பட்டு 2 நாட்களுக்கு ஒருமுறை சுழற்சி முறையில் பணியாற்றுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, முதல் பிரிவினர் திங்கள் முதல் செவ்வாய் கிழமைகளில் பணிக்கு வருவார்கள் என்றும், 2 வது பிரிவினர் புதன் மற்றும் விழாயன் அன்று பணிக்கு வருவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வெள்ளி மற்றும் சனிக்கிழமைகளில் மீண்டும் முதல் பிரிவினர் பணிக்கு வருவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2-வது வாரத்தில் இருந்து திங்கள் மற்றும் செவ்வாய் கிழமைகளில் 2-வது பிரிவினர் அலுவலகத்திற்கு வருவார்கள் என்றும் மறு அறிவிப்பு வரும் வரை இந்த நடைமுறையே தொடரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு வராத அலுவலர்கள் மின்னணு சாதனம் மூலம் வீட்டிலிருந்தே அலுவலகத்துடன் இணைந்திருக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. தேவைப்பட்டால் எந்த நேரமும் அவர்கள் அலுவலகத்திற்கு அழைக்கப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. குரூப் ‘ஏ’ நிலை அதிகாரிகள் மற்றும் தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் அனைத்து நாட்களும் பணிக்கு வரவேண்டும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசு ஊழியர்கள் அலுவலங்களுக்கு வர ஏதுவாக போக்குவரத்து வசதி ஏற்படுத்தப்படும் என்றும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post