காபூல் நகரில் உள்ள மகப்பேறு மருத்துவமனையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குலில் பச்சிளம் குழந்தைகள் இருவர் உட்பட 24 பேர் கொல்லப்பட்டனர். இக்கொடூர சம்பவத்தில், 20 பச்சிளம் குழந்தைகளின் தாய்மார்கள் பலியாகினர். ஆதரவில்லாமல் மருத்துவமனையில் இருக்கும் இருபது பச்சிளம் குழந்தைகளுக்கும் பெண் ஒருவர் தாமாக முன்வந்து தாய்ப்பால் வழங்கி வருகிறார். ஆப்கானிஸ்தானின் நிதியமைச்சகத்தில் பணியாற்றும் பெரோசா யூனிஸ் உமர் என்ற பெண்மணியே இந்த சேவையை செய்து வருகிறார். பெரோசாவின் இந்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.
Discussion about this post