இந்தியாவில் நேற்று 3 ஆயிரத்து 967 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டதால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 81 ஆயிரத்து 970ஆக உயர்ந்துள்ளது.
மகாராஷ்டிராவில், நேற்று ஆயிரத்து 602 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியனதால், மாநிலத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 27 ஆயிரத்து 524ஆக அதிகரித்துள்ளது. பலியானோர் எண்ணிக்கை ஆயிரத்தை கடந்துள்ளது. தமிழகத்தில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 9 ஆயிரத்து 674ஆக உயர்ந்துள்ளது. 2 ஆயிரத்து 240 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். குஜராத் மாநிலத்தில் 9 ஆயிரத்து 591 பேரும், டெல்லியில் 8 ஆயிரத்து 470 பேரும் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். ராஜஸ்தானில் 4 ஆயிரத்து 534 பேரும், மத்தியப் பிரதேசத்தில் 4 ஆயிரத்து 426 பேரும், உத்தரப் பிரதேசத்தில் 3 ஆயிரத்து 902 பேரும் பாதிப்புக்கு ஆளாகியுள்ளனர். இதேபோன்று, மேற்குவங்கம், ஆந்திரா, பஞ்சாப் போன்ற மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ளது. இந்தியாவில் 27 ஆயிரத்து 920 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். உயிரிழந்தோர் எண்ணிக்கை 2 ஆயிரத்து 649 ஆக உயர்ந்துள்ளது.
Discussion about this post