உலகளவில் கொரோனாவால் அதிகம் பாதித்த நாடுகளில் முதலிடம் வகிக்கும் அமெரிக்காவில், பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 14 லட்சத்து 56 ஆயிரத்தை கடந்துளளது. நேற்று ஒரேநாளில் ஆயிரத்து 700 பேர் பலியான நிலையில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 87 ஆயிரத்தை நெருங்குகிறது. ஸ்பெயினில் 2 லட்சத்து 72 ஆயிரம் பேரும், ரஷ்யாவில் 2 லட்சத்து 52 ஆயிரம் பேரும், இங்கிலாந்தில் 2 லட்சத்து 33 ஆயிரம் பேரும் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இத்தாலியில் 2 லட்சத்து 23 ஆயிரம் பேர் கொரோனா தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். பிரேஸிலில் 2 லட்சத்து 2 ஆயிரம் பேரும், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் ஒரு லட்சத்து 70 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதேபோன்று, துருக்கி, ஈரான் போன்ற நாடுகளிலும் பாதிப்பு அதிகமாக உள்ளது. உலகளவில் ஒட்டுமொத்தமாக, 45 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 17 லட்சத்து 2 ஆயிரம் பேர் குணமடைந்துள்ளனர்.
Discussion about this post