கொரோனா ஊரடங்கால் பாதிக்கப்பட்ட பல்வேறு துறைகளுக்கு, மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சலுகை திட்டங்களை அறிவித்தார். கடந்த 2 மாதங்களில் 25 லட்சம் விவசாயிகளுக்கு கிஷான் கடன் அட்டை அளிக்கப்பட்டுள்ளதுடன், அதன் மூலம் 25 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு கடன் வழங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். 3 கோடி விவசாயிகளுக்கு 4.22 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதை சுட்டிக்காட்டிய அவர், கடனுக்கான வட்டியை செலுத்துவதில் இருந்து 3 மாத காலம் விலக்கு அளிக்கப்படுவதாக குறிப்பிட்டார். மானியத்துடன் வழங்கப்பட்ட பயிர்க் கடனுக்கான வட்டியை, விவசாயிகள் திருப்பிச் செலுத்துவதற்கான அவகாசம் மே 31 வரை நீட்டிக்கப்படுவதாக தெரிவித்தார்.
Discussion about this post