நாமக்கல் மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77 பேருக்கு, கரூர், சேலம் மற்றும் நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது. இதில், ஏற்கனவே 61 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ள நிலையில், கரூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரும், நாமக்கல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 15 பேரும் நோய் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். நாமக்கல் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்ற வழியனுப்பும் நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சியர் மெகராஜ் கலந்துக் கொண்டு, குணமடைந்த 15 பேரை வாழ்த்தி வீட்டிற்கு அனுப்பி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஆட்சியர், மாவட்டத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 77 பேரும் குணமடைந்திருப்பதால், தொற்று இல்லாத மாவட்டமாக நாமக்கல் மாறியுள்ளதாக தெரிவித்தார்.
Discussion about this post