புதிதாக 509 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9ஆயிரத்து 227ஆக அதிகரித்துள்ளது. புதிதாக கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்ட 509 பேரில் 288 பேர் ஆண்கள் என்றும், 221 பேர் பெண்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்சமாக தலைநகர் சென்னையில் 380 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானதால், பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 5 ஆயிரத்து 262 ஆக உயர்ந்துள்ளது. செங்கற்பட்டு மற்றும் திருவள்ளூரில் தலா 25 பேர் புதிதாக கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் புதிதாக 23 பேருக்கும், கடலூர் மாவட்டத்தில் 17 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செயப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தில் புதிதாக 7 பேருக்கும், திருநெல்வேலி மற்றும் தேனியில் தலா 5 பேருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. காஞ்சிபுரம் மற்றும் அரியலூர் மாவட்டங்களில் தலா 4 பேர் கொரோனாவால் பாதிக்கபட்டுள்ளனர்
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், நேற்று ஒரே நாளில் 42 பேர் குணமடைந்தனர். இதனால் கொரோனாவில் இருந்து மீண்டவர்களின் எண்ணிக்கை இரண்டாயிரத்து 176 ஆக அதிகரித்துள்ளது.
Discussion about this post