ஏற்கனவே மார்ச் , ஏப்ரல் மற்றும் மே மாதத்திற்கான இபிஎஃப் தொகையை மத்திய அரசு செலுத்தியிருந்தது. இந்நிலையில், மேலும் 3 மாதங்களுக்கான இபிஎஃப் தொகையை மத்திய அரசு செலுத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக மத்திய அரசு 2 ஆயிரத்து 500 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்துள்ளது. இதன் மூலம், நாடு முழுவதும் 70 லட்சத்து 22 ஆயிரம் தொழிலாளர்கள் பலனடைவர். முன்கூட்டியே பிடித்தம் செய்யப்பட வேண்டிய TDS வரி, 25 சதவீதம் குறைக்கப்பட்டுள்ளது. TDS பிடித்தம் குறைக்கப்பட்டதால், மக்களிடையே 50,000 கோடி ரூபாய் அளவுக்கு கூடுதல் பணப்புழக்கம் இருக்கும் என எதிர்பார்க்கபடுகிறது. 2019 மற்றும் 20ம் நிதியாண்டிற்கு, வருமானவரி கணக்கு தாக்கல் செய்வதற்கான அவகாசம், நவம்பர் 30ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post