தனி மனித இடைவெளியை உறுதி செய்யும் வகையில் பிரான்சை சேர்ந்த பெண் ஒருவர், நூதன முறையை கடைபிடித்துள்ளார். கொரோனா வைரசை கட்டுப்படுத்தும் வகையில் உலக நாடுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளன. குறிப்பாக மக்கள் பொது இடங்களுக்கு செல்லும் போது, சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.அந்த வகையில், பாரீஸ் நகரை சேர்ந்த பெண் ஒருவர், எதிர் திசையில் வருவோர் தம்மை உரசி செல்லாத வகையில், மீட்டர் அளவுகோலை தலைக்கு பின்னால் கட்டியபடி சென்றார்.
Discussion about this post