தமிழகத்தில் தற்போதைய கொரோனா பாதிப்பு குறித்த நிலவரம் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்து விவாதிப்பதற்காக, மாவட்ட ஆட்சியர்களுடன் காணொலி மூலம் முதலமைச்சர் இன்று ஆலோசனை நடத்துகிறார். மத்திய அரசு அனுமதி வழங்கியதை அடுத்து, தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டது. அதன் படி கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகள் அல்லாத பிற பகுதிகளில், பல்வேறு வகை கடைகள் சமூக இடைவெளியை கடைபிடித்து இயங்கி வருகின்றன. தொழில் நிறுவனங்களும் 33 சதவீத ஊழியர்களுடன் அரசின் விதிமுறைகளை கடைபிடித்து இயங்கி வருகின்றன. தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு குறைந்ததன் காரணமாக, சிவப்பு மண்டலங்களில் இருந்து ஆரஞ்சு மண்டலத்திற்கு மாறியுள்ளன. இந்நிலையில், கொரோனா பரவலை முழுமையாக கட்டுப்படுத்துவது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என கூறப்படுகிறது.
Discussion about this post