கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, கடந்த நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் முன்கூட்டியே முடிக்கப்பட்டது. மார்ச் 23 ஆம் தேதி முதல் காலவரையின்றி ஒத்தி வைக்கப்படுவதாக சபாநாயகர் ஓம் பிர்லா அறிவித்தார். இந்நிலையில் தற்போதுள்ள சூழலில், ஜீன் மாதம் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடர் நடைபெறுவது குறித்து பலரும் சந்தேகம் தெரிவித்திருந்தனர். இதற்கு பதிலளிக்கும் வகையில் பேசிய மக்களவை சபாநாயகர் ஓம்பிர்லா, நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத்தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என தெரிவித்துள்ளார். தற்போது வரை மழைக்காலக் கூட்டத்தொடரை ஒத்திவைக்கும் திட்டம் எதுவும் இல்லை என்றும், எனினும் அந்நேரத்தில் நிலவும் சூழல் அடிப்படையில் முடிவெடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
Discussion about this post