அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா கடந்த பல ஆண்டுகளாக செவ்வாய் கிரகம் பற்றி ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறது. அங்கு ரோவர்களை தரையிறக்கியுள்ள நாசா, 2030-ம் ஆண்டு வாக்கில் மனிதர்களை செவ்வாய் கிரகத்திற்கு அனுப்ப திட்டமிட்டுள்ளது. அதற்குள் அங்கிருக்கும் கற்களையும், மண்ணையும் பூமிக்கு எடுத்துவந்து ஆராய்ச்சி செய்யும் திட்டமும் நாசாவிடம் உள்ளது. அவ்வாறு செவ்வாய் கிரகத்தில் இருந்து பூமிக்கு எடுத்துவரும் பொருட்கள் மூலமோ அல்லது அங்கு சென்று திரும்பும் மனிதர்கள் மூலமோ புதிய வகை வைரஸ்கள் பூமிக்கு வரலாம் என விஞ்ஞானிகள் எச்சரித்துள்ளனர். இதுபோன்ற ஏலியன் வைரஸ்களிடம் இருந்து நம்மை தற்காத்துக்கொள்ளும் வழிமுறைகளை கண்டறிய வேண்டியதும் அவசியம் எனவும் அவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
Discussion about this post