இந்தியா முழுவதும் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 60 ஆயிரத்தை நெருங்கி வருகிறது. நாடு முழுவதிலும், கொரோனா வைரஸ் அதிகளவில் தாக்கத்தை ஏற்படுத்திய 75 மாவட்டங்களில், நோய்த்தொற்று அறிகுறி இல்லாதவர்களிடம் இருந்து சமூகப் பரவல் ஆகிறதா என்பது குறித்து விரைவில் ஆய்வு நடத்தப்படவுள்ளது. சிவப்பு, ஆரஞ்சு, பச்சை மண்டலங்களில் வசிப்பவர்களிடம், உடலில் உள்ள நோய் எதிர்ப்புத் திறன், தொற்று அறிகுறி போன்றவை குறித்து ஆய்வு நடத்தப்படவுள்ளது. எலிசா ரத்த பரிசோதனை அல்லது பிசிஆர் சோதனை மூலடம் நடத்தப்படுகிறது. இதன் மேலும், அதிக மக்கள் தொகை மற்றும் அதிக மக்கள் வந்துசெல்லும் மாவட்டங்கள் ஆகிய பகுதிகள் தேர்வு செய்யப்பட்டு ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது. இதன் மூலம் கொரோனா சமூகப் பரவலாகிறதா என்பது தெரியவரும்.
Discussion about this post