கொரோனா ஊரடங்கால் கடந்த ஐம்பது நாட்களாக திரைப்பட மற்றும் சின்னத்திரை பணிகள் எதுவும் நடைபெறாத நிலையில், தயாரிப்புக்கு பிந்தைய பணிகளுக்கு மட்டும் அனுமதி அளிக்குமாறு, தயாரிப்பாளர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை கனிவுடன் பரிசீலித்த முதலமைச்சர், 11 ஆம் தேதி முதல் தயாரிப்புக்கு பிந்தைய பணிகளை மேற்கொள்ள அனுமதி வழங்கியுள்ளார். படத்தொகுப்பு, குரல் பதிவு, பின்னணி இசை, ஒலிக்கலவை ஆகியவற்றுக்கு, அதிகபட்சம் 5 பேருக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. கம்ப்யூட்டர் மற்றும் விஷ்யூவல் கிராபிக்ஸ் பணிக்கு 10 முதல் 15 பேருக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட நிறுவனங்கள், இப்பணியில் ஈடுபடுகின்ற பணியாளர்களுக்கு உரிய அனுமதி சீட்டுக்களை பெற்றுத் தந்து, அவர்கள் சமூக இடைவெளியுடனும், முகக்கவசம் மற்றும் கிருமி நாசினி உபயோகித்தும், மத்திய, மாநில அரசுகளின் அனைத்து கட்டுப்பாடுகளை பின்பற்றி பணியாற்றுவதையும் உறுதி செய்ய வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Discussion about this post