பாகிஸ்தான் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ள இந்திய கடற்படை முன்னாள் அதிகாரி குல்பூஷன் ஜாதவ் மீதான வழக்கு அடுத்த மாதம் விசாரிக்கப்படும் என்று சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்திய கடற்படை வீரர் குல்பூஷன் ஜாதவ் பாகிஸ்தான் அதிகாரிகளால் 2016ம் ஆண்டு மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். பாகிஸ்தானுக்கு எதிராக சதிச் செயலில் ஈடுபட அவர் வந்ததாக குற்றம் சுமத்தப்பட்டது. இது தொடர்பான வழக்கை விசாரித்த பாகிஸ்தான் நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவிற்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. ஆனால் சர்வதேச நீதிமன்றம் குல்பூஷன் ஜாதவிற்கு விதித்த மரண தண்டனைக்கு தடை விதித்து உத்தரவிட்டது.
இந்நிலையில் அடுத்த மாதம் 18 முதல் 21 வரை பொது விசாரணை நடத்த இருப்பதாக சர்வதேச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. இந்த பொது விசாரணை நீதிமன்றத்தின் இணையதள பக்கத்திலும் ஐநா இணைய தள தொலைக்காட்சியிலும் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post