அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய அனுமதி வழங்குமாறு, மத்திய அரசுக்கு, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளன. கொரோனா பரவலைத் தடுக்கும் வகையில், மே மாதம் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஊரடங்கு முடியும் வரை, ஆன்லைன் வர்த்தக நிறுவனங்கள், உணவு, மருந்து உள்ளிட்ட அத்தியாவசியப் பொருட்களை மட்டும் விநியோகம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அத்தியாவசியமற்ற பொருட்களை ஆன்லைனில் விற்பனை செய்ய மே மாதம் 3 ஆம் தேதி வரை தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், அமேஸான், பிளிப்கார்ட் போன்ற நிறுவனங்கள் அத்தியாவசியமற்ற பொருட்களையும் விற்பனை செய்ய அனுமதி வழங்கவேண்டும் என மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளன. மேலும், பொருட்களை விநியோகம் செய்யும்போது, முகக்கவசம் அணிவதுடன், சமூக இடைவெளி கடைபிடிக்கப்படும் என்றும் அவர்கள் உறுதியளித்துள்ளனர்.
Discussion about this post