திருச்சி மாவட்டம் முசிறி அருகே குடும்ப தகராறு காரணமாக கணவன் மற்றும் தாய் கண் முன்பே கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் டி.புதுப்பட்டியை சேர்ந்த சஞ்சிவீராஜ் என்பவருக்கும் ரக்ஷனா என்ற பெண்ணுக்கு கடந்த 6 மாதங்களுக்கு முன் திருமணம் ஆனது. ரக்ஷனா கர்பிணியாக இருந்துள்ளார். கணவன், மனைவி ஆகிய இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதனால் கோபமடைந்த ரக்ஷனா தாய் வீட்டிற்கு செல்ல வேண்டும் என்று கூறியதால் அவரது கணவன் சஞ்சீவிராஜ் இருசக்கர வாகனத்தில் அழைத்து சென்றுள்ளார். இந்நிலையில் தாய் வீட்டின் அருகே கணவன், மனைவி இருவருக்கும் மீண்டும் வாக்குவாதம் ஏற்படவே இருசக்கர வாகனத்திலிருந்து கீழே இறங்கிய ரக்ஷனா அங்கிருந்த கிணற்றில் குதித்துள்ளார். இதனை கண்ட அவரது தாயார் தனலட்சுமி கிணற்றில் குதித்து மகளை காப்பாற்ற முயற்சித்தும் ரக்ஷனா பரிதாபமாக உயிரிழந்தார். ரக்ஷனாவின் இறப்பிற்கு காரணமான கணவர் மற்றும் அவரது மாமியாரை காவல்துறையினர் கைது செய்தனர்.
Discussion about this post