இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டுள்ள கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகளுக்காக பிரதமர் மோடிக்கு மைக்ரோசாப்ட் நிறுவன அதிபர் பில்கேட்ஸ் பாராட்டு தெரிவித்துள்ளார். தேசிய ஊரடங்கை அமல்படுத்தியது உள்ளிட்ட பல்வேறு முன்னேச்சரிக்கை நடவடிக்கைகள் மூலம், இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுக்குள் வைத்திருக்கும் பிரதமர் மோடியின் தலைமை மற்றும் ஆளுமை திறனை பாராட்டுவதாக பில் கேட்ஸ் தெரிவித்துள்ளார். ஹாட்ஸ்பாட் பகுதிகளை கண்டறிதல்,தனிமைப்படுத்துதல், மருத்துவத்துறைக்கு தேவையான நிதியை ஒதுக்கி சுகாதாரத்துறையை வலுப்படுத்துதல் மற்றும் தடுப்பு மருந்துகளுக்கான ஆராய்ச்சிகளை ஊக்குவித்தல் உள்ளிட்டவற்றை இந்திய அரசு சிறப்பாக செய்து வருவதாக தெரிவித்துள்ளார். இந்திய அரசு மின்னணுத்துறையில் உள்ள வசதிகள் அனைத்தையும் பயன்படுத்தி, ஆரோக்ய சேது செயலியை வடிவமைத்து கொரோனா பாதிப்புகளை கண்டறிவது குறித்து மகிழ்ச்சியடைகிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார். இறுதியாக, அனைத்து இந்தியர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த பொது சுகாதார நடவடிக்கைகளை எடுத்துவருவதற்கு, பிரதமருக்கு நன்றி தெரிவிப்பதாகவும் பில்கேட்ஸ் கூறியுள்ளார்.
Discussion about this post